எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. நீட் மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்துகிறது.
நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரண மானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நீட் மறுதேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை ஓரிரு வாரங்களில் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்வம் இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள், அதுதொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் வரை விண்ணப்பிக்கலாம். அதனால், கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுபோலவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்டிஏவிடம் இருந்து நீட் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என்றனர்
MBBS படிப்பிற்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் - மருத்துவ கவுன்சில் கடிதம்.
“MBBS படிப்பிற்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது.''
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கடிதம்.
MBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம் Application registration for MBBS and BDS courses begins today.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் MBBS & BDS படிப்புகளுக்கு இன்று (ஜூன் 29) மதியம் 12 மணி முதல் tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 29, 2026) பிற்பகல் 12:00 மணி முதல் தொடங்கியுள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த விண்ணப்பப் பதிவு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
முக்கியத் தகவல்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம்: மாணவர்கள் TN Medical Selection என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்திவிட்டு, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கடைசித் தேதி: நீட் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு, மாணவர்கள் தங்களது மதிப்பெண்களைப் புதுப்பிக்க ஏதுவாகக் குறைந்தபட்சம் ஒரு வாரம் வரை விண்ணப்பப் போர்டல் திறந்திருக்கும்.
இறுதித் தேதி குறித்த விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
தரவரிசைப் பட்டியல்: மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள், தேசிய தேர்வு முகமை (NTA) வழங்கும் நீட் தேர்வு மதிப்பெண் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, இறுதித் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான சாதிச் சான்றிதழ் (Community Certificate), இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Monday, June 29, 2026
MBBS,BDS படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
TN Medical Selection
Labels:
Application,
Application Form,
BDS,
BDS Counselling,
Community Certificate,
MBBS,
MBBS and BDS,
MBBS and BDS courses,
MBBS courses,
Nativity Certificate,
TN Medical Selection
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.