இதுவரை அரசுப் பள்ளிகளில் 13.84 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

இதுவரை அரசுப் பள்ளிகளில் 13.84 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இதுவரை அரசுப் பள்ளிகளில் 13.84 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
ஈரோடு: அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளதால், இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி சட்டப்பேரவை தொகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமாக உள்ளனர். அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது. வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews