‘நீட்' வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்கவைப்பு
This article discusses security measures taken regarding the NEET examination, specifically mentioning that the question paper preparation team has been housed in a secret location until the 21st.
The report notes that 11 individuals have been arrested in connection with paper leaks, and tight surveillance is in place to prevent further irregularities.
It highlights that authorities are restricting communication devices and external contacts for personnel involved in the paper creation and printing process to maintain confidentiality.
தேர்வு பணியில்
விமானப்படை விமானங்கள்
நாடு முழுதும் உள்ள 25 இடங்களில் இருந்து நம் விமானப் படை விமானங்கள் வாயிலாக, வினாத்தாள் உள்ளிட்ட நீட் மறுதேர்வுக்கான பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வை பாதுகாப்பாகவும், சுமுகமாகவும் நடத் துவதற்கான பொறுப்பு விமானப் படையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதிகாரிகள் கோரும் கூடுதல் உதவிகளை வழங்க ஆயுதப் படை தயாராக இருப்பதாகவும் ராணுவ வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
'நீட்' மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்கள் குழு, வரும் 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப் படும், 'நீட்' நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி. எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' நுழை வுத் தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடந்தது.
தேர்வு ரத்து
நம் நாட்டிலும், வெளி நாடுகளிலும், 22 லட்சத் துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர்.
இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்பே கசிந் ததாக புகார் எழுந்ததை அடுத்து, 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டது.
இதையடுத்து, வரும் 21ம் தேதி மறுதேர்வு நடக் கவுள்ளது. நாடு முழுதும் 551 நகரங்களில், பிற் பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை இந்த தேர்வு நடத்தப்படு
+
கிறது. முறைகேடு தொடர் பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், 11 பேரை கைது செய்து உள்ளனர்.
வினாத்தாள் தயாரிப் பில் ஈடுபட்ட பேராசிரியர் களே பெரும்பாலும் இந்த முறைக்கேட்டில் ஈடுபட் டிருந்ததும், தயார் செய்த வினாக்களை மாணவர்க ளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றதும் விசாரணையில் தெரிய
வந்தது.
இதையடுத்து. நடக் கவிருக்கும் மறுதேர்வுக் கான வினாத்தாள் கசி யாமல் தடுக்க, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்ச கம் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாணவர்கள் சிரம மின்றி மறுதேர்வு எழுத தீவிரகண்காணிப்பில் என். டி.ஏ. ஈடுபட்டுள்ளது.
தீவிர ஆய்வு
குறிப்பாக, வினாத்தாள் தயாரித்த குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர் கள், மதிப்பீட்டாளர்கள், வினாத்தாள் உருவாக்கத் தின் ரகசிய கட்டங்களு டன் தொடர்புடைய பிற பணியாளர்கள், 24 மணி நேர தீவிர கண்காணிப் பில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
'மொபைல் போன்கள், லேப் டாப்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாத னங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.
இணையதள பயன்பா டும் கட்டுப்படுத்தப்பட் டுள்ளது. வெளித்தொடர்பு களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் இருக்கும் வளா கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடமாட் டம் கண்காணிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. அங்கீகரிக்கப் பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதி உண்டு.
வரும் 21ம் தேதி வரை அவர்கள் ரகசிய இடத் திலேயே தங்க வைக்கப் பட்டிருப்பர். வினாத்தாள் உருவாக்கம், அச்சிடுதல், பேக்கிங் செய்தல், போக்கு வரத்து மற்றும் இறுதி வினி யோகம் வரை ஒவ்வொரு கட்டமும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
Wednesday, June 10, 2026
‘நீட்' வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்கவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.