ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ம் ஆண்டின் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்குகான "Zero investment innovation for Education Initiatives (ZIIEI)" வட்டார அளவில் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல் - சார்பு - Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ம் ஆண்டின் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்குகான "Zero investment innovation for Education Initiatives (ZIIEI)" வட்டார அளவில் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல் - சார்பு - Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒருங்கிணைந்த கல்வி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை. முனைவர் ஆ அனிதா அவர்கள் . ந.க.எண்:92/ பயிற்சி/ஓக/2020-21, நாள்: 07.08.2020
பொருள் : சென்னை மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- 2020-21ம் ஆண்டின் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்குகான "Zero investment innovation for Education Initiatives (ZIIEI)" வட்டார அளவில் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல் - சார்பு
பார்வை : சென்னை -06, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 1909/B8/NGO/SAS/2019 நாள் 05.07.2020
பார்வையில் காணும் மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்திற்குகிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி Sri Aurobindo Society யுடன் இணைந்து தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பாடச் சம்பந்தமாக “Zero investment innovation for Education Initiatives (ZIIEI)” பயிற்சியானது Online மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்னோடியாக ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு Online பயிற்சியானது 06.08.2020 அன்று நடைபெற்றது. எனவே இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 24.08.2020 முதல் Online பயிற்சியானது ஜார்ஜ்டவுன் மண்டலத்தில் தொடங்கி அனைத்து மண்டலங்களிலும் நடைபெற உள்ளது. Sri Aurobindo Society - ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து இப்பயிற்சியை ஆசிரியர்களுக்கு சிறப்பாக நடத்துமாறு அனைத்து மண்டல மேற்பார்வையாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சியில் அரசுப்பள்ளிகள் / சென்னைப் பள்ளிகள்/ அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள ஏதுவாக ZOOM APPயை பதிவிறக்கம் செய்து தயார்நிலையில் இருக்கவும், பயிற்சியில் தவறாது கலந்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை மாவட்டம்
பெறுநர்
1. வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)
2. அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் (மண்டலம் வழியாக)
நகல்
கல்வி அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை .
2. மாவட்ட கல்வி அலுவலர், (கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு) சென்னை .
3. அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்.
4. Sri Aurobindo Society 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews