Breaking

Friday, July 17, 2020

அமைச்சருக்கு தெரியாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று அவசரமாக வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக நேற்று காலை 7.50க்கு தான் செய்தி குறிப்பு அரசுத் தரப்பில் இருந்து வெளியானது. நேரம் குறிப்பிடாமல் செய்திக் குறிப்பு வெளியானது. ஆனால் 9 மணிக்கு வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் காலை 8 மணிக்கே ஆளும் கட்சிக்கு வேண்டிய தொலைக்காட்சி ஒன்றுக்கு முடிவுகளை தேர்வுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன் மூலம்தான் தேர்வு முடிவுகள் வெளியானது பலருக்கு தெரியவந்தது. அதன்பிறகே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தேர்வுத்துறைக்கு போன்மூலம் விசாரித்து தெரிந்து கொண்டதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் சென்னையில் பேட்டி அளித்த அமைச்சர், 27ம் தேதி நடக்க உள்ள தேர்வுகளுக்கு பிறகுதான் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். மேலும், நேற்று காலை ஈரோடு பகுதியில் பேட்டி அளித்த போதும்கூட தேர்வு முடிவுகள் குறித்து ஏதும் அமைச்சர் தெரிவிக்கவில்லை. பின்னர் தான் தேர்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பிறகு தான் மற்ற ஊர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்புவது வழக்கம். மேலும், தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. ஆனால் அதன்படி எத்தனை மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் சென்றது என்று தேர்வுத்துறை வெளியிடவில்லை. கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் மறு கூட்டல், விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதிகள் குறிப்பிட்டு அறிவிக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு அவசரம் அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog