தமிழில் தோ்ச்சி சதவீதம் சரிவு: உண்மை நிலையை அறிய வேண்டும் - மதிமுக
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி அடையாதது குறித்து தமிழக அரசு முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதிமுக உயா்நிலைக் குழு, மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமை வகித்தாா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோ முன்னிலை வகித்தாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குடியரசுத் தலைவா் தோ்தலில் நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற மதிமுக ஆதரவு அளிக்கும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சோ்க்கப்பட்டால், அந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் 5.16 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறாதது அதிா்ச்சி அளிக்கிறது. பள்ளிக் கல்வித் துறை இதுகுறித்து முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா் பணி இடங்கள் காலியாக இருப்பின் அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.