தில்லயில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தில்லியின் பல்வேறு இடங்களில் மழைநீா் நீா் தேங்கி, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் தில்லியின் ஜாகிரா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர். இன்றும் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 153 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தில்லிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில தலைநகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து துறை ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்த அவர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.