பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி துவங்க உள்ளது. பல்வேறு பாட வாரியாக தினமும் தேர்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளன.
செய்முறை தேர்வுகள், டிச., 13ல் நடத்தப்படும். டிச., 17ல் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பின், ஜனவரி 2ல், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுக்கான விரிவான அட்டவணை, வரும் 11ம் தேதி வெளியிடப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.