conduct of the First Semester Comprehensive Assessment Examination - 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 21, 2022

Comments:0

conduct of the First Semester Comprehensive Assessment Examination - 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம் - Letter of Instruction to the District Education Officers regarding the conduct of the First Semester Comprehensive Assessment Examination for Class 4 and 5 students.

முதன்மைக் கல்வி அலுவலகம் திருச்சிராப்பள்ளி.

ந.க.எண். 08314 /ஆ4 /2022. நாள். 21.09.2022 (நகல் )தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

இணைப்பில் கண்டுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுக்கான தேர்வினை நடத்திடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வினாத்தாட்கள் பள்ளிவாரியாக வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு 25.09.2022 அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. க்குள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினந்தோறும் (26.09.200 முதல் 30.09.2022 வரை) அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாட்களை காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் குறுவளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் அலுவலகப் பணியாளர்கள் வாயிலாக 10 முதல் 15 பள்ளிகளாக பிரித்து அந்தந்தப் பகுதிகளில் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும்.

வினாத்தாள் கட்டுகளை ஒப்படைக்க வட்டாரக்கல்வி அலுலவர்கள் சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

விடைக்குறிப்புகள் 30.09.2022 அன்று வழங்கப்பட வேண்டும்.இப்பொருள் சார்பாக எவ்வித புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக தேர்வுகளை நடத்தி முடித்திட அனைத்து நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்க.ள்.

இணைப்பு - கடித நகல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews