2026-27 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பொருட்களை வழங்குவது குறித்து DEE அறிவுரைகள் DEE Instructions Regarding the Distribution of Free Supplies for the 2026-27 Academic Year
தொடக்கக்கல்வி விலையில்லா நலத்திட்டங்கள் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ/மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக DEE Instructions
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்.1842/கே3/2026, நாள். 18.05.2026.
பொருள்: பார்வை:
தொடக்கக்கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள் - அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ/ மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
1. சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநரின் கடிதம் ந.க.எண்.5713/Pur-1/2025, நாள்.27.01.2026 மற்றும் 07.04.2026.
2. இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள், நாள்.02.02.2026 மற்றும் 08.04.2026.
பார்வை (1)-ல் காணும் கடிதங்களில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்களைக் கொள்முதல்
கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்களைப் பள்ளி தொடங்கும் நாளன்றே வழங்குவதற்கு ஏதுவாக கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகஸ்தர்கள் மூலம் விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லாக் கல்விக் உபகரணப் பொருட்களின் மாதிரிகளை (Samples) சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு அனுப்புமாறு பார்வை (2)-ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்று மாணவ/ மாணவியருக்கு வழங்கப்படும் வரை கீழ்க்காணும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது. கல்வி
* 2026-27ஆம் கல்வியாண்டிற்கு ஏற்கனவே மாவட்டக் அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட்ட (மாவட்டக்கல்வி / வட்டாரம்) நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப நலத்திட்டப் பொருட்கள் பெறப்படுகின்றனவா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)கண்காணித்திட வேண்டும்.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களைப் பெறும்பொழுது, அவ்விவரத்தினை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) சார்ந்த அலுவலர்கள் உரிய பதிவுகளை தவறாது மேற்கொள்ள வேண்டும். இருப்புப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னரே பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
* நலத்திட்டங்கள் சார்ந்த பொருட்களைப் பள்ளிகளுக்கு வழங்கும்போது, வழங்கப்பட்ட விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் (Distribution Register) பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் தாம் பெற்றுக்கொண்ட பொருட்களுக்குரிய விவரங்களுக்கு தேதியுடன் கையொப்பம் இட வலியுறுத்தப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் ஆளுகைக்குட்பட்ட ஒன்றியங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் பொருட்களைப் பெறவில்லை எனில், கல்வி மாவட்டத்திலுள்ள மற்ற ஒன்றியங்களில் கூடுதலாக பொருட்களைப் பெற்று இருப்பின் அவற்றை மீளப் பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். இந்நடவடிக்கையை மேற்கொண்ட பின்பும் தேவை இருப்பின் இவ்வியக்கக இயக்குநர் (உதவிபெறும் பள்ளிகள்) மின்னஞ்சல் deejdaided@gmail.com மற்றும் "கே" மின்னஞ்சல் deeksection.tn@gmail.com முகவரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இணை பிரிவு
2026-27ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை நலத்திட்டங்கள் மாணவ/ மாணவியருக்கு முழுமையாக வழங்கப்படும் வரை விநியோக மையங்களில் அப்பொருட்கள் பாதுகாப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும். (பழைய கட்டடங்கள், மழை/வெள்ளப் பாதிப்பு மற்றும் மின்கசிவு ஏற்படாத இடங்களில்)
சீருடைகள் (Uniforms), காலணிகள் (Footwear), கால் ஏந்திகள் (Shoes), கம்பளிச்சட்டை (Woollen Sweater), மழையாடை (Raincoat), கணுக்கால் காலணிகள் (Ankle Boots) ஆகிய நலத்திட்டங்களுக்குத் தேவைப்பட்டியலின் அடிப்படையில் அளவுவாரியாக (Size) சரியான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளனவா? என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெறுநர்
* கல்வி உபகரணப் பொருட்களான வண்ணம் தீட்டும் குச்சிகள் (Crayons), வண்ணப்பென்சில்கள் (Colour Pencils), கணித உபகரணப் பெட்டி (Geometry box), புத்தகப்பை (School bag), காலணிகள் (Footwear), கால் ஏந்தி (Shoes), கம்பளிச்சட்டை (Woollen Sweater), மழையாடை (Raincoat) மற்றும் கணுக்கால் காலணிகளுக்கு (Ankle Boots) சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து தரச்சான்று பெறப்பட்ட பின்னரே மாணவ/மாணவியருக்கு வழங்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் தனியாகப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அப்பதிவேட்டில் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படும் எண்ணிக்கை விவரங்களைப் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
இப்பணிகளில் * விநியோக மையங்களிலிருந்து சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் சார்ந்த பொருட்கள் தேவைப்பட்டியலின்படி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு நலத்திட்டப் பொருட்களைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகளில் பெறப்படும் நலத்திட்டங்கள் சார்ந்த பொருட்களை, அவற்றிற்கான பதிவேடுகளில் ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் வகுப்பு வாரியாக மாணவ/மாணவியருக்கு வழங்கப்படும் எண்ணிக்கை விவரத்தினை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும், அனைத்து நலத்திட்ட பொருட்கள் பெறப்பட்டது மற்றும் மாணவ/மாணவியருக்கு வழங்கப்பட்ட விவரத்தை உடனுக்குடன் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும். தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் தரச்சான்று பெற்ற இதரக் கல்வி உபகரணப் பொருட்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD 2026-27- Schemes - Instructions PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.