NET EXAM - விண்ணப்பிக்க நாளை (மார்ச் 9) கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 08, 2021

Comments:0

NET EXAM - விண்ணப்பிக்க நாளை (மார்ச் 9) கடைசி நாள்!

உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரிவதற்கான தகுதி பெறவும், &'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்’ பெறவும், ‘நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ எனும் தேசிய அளவிலான தகுதி தேர்வை எழுத வேண்டியது அவசியம்!
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட &'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ நடத்தும் இத்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை எழுதலாம். பாடப்பிரிவுகள்:
அடல்ட் எஜுகேஷன், ஆந்த்ரோபாலஜி, அரபிக், ஆர்கியாலஜி, காமர்ஸ், கிரிமினாலஜி, எக்னாமிக்ஸ், எஜுகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ், இங்கிலிஷ், என்விரான்மென்டல் சயின்சஸ், பாரின்சிக் சயின்ஸ், பிரெஞ்ச், ஜியாகிரபி, ஹிந்தி, ஹிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், மாஸ்கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், மியூசிக், பிலாசபி, பிசிக்கல் எஜுகேஷன், பொலிட்டிக்கல் சயின்ஸ், சைக்காலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், சோசியல் மெடிசின் அண்ட் கம்யூனிட்டி ஹெல்த், சோசியல் வொர்க், சோசியாலஜி, தமிழ், தெலுங்கு, வுமன் ஸ்டடீஸ், யோகா, சட்டம் உட்பட 81 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தகுதிகள்:
துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் உரிய முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். &'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்’ எனும் ஜே.ஆர்.எப்., உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. எனினும் விதிமுறைப்படி, சிறப்பு பிரிவினர்களுக்கு வயது வரம்பு மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்களில் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் தகுதிபெற விண்ணப்பிப்பவர்களுக்கு வயதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேர்வு முறை:
மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வு, 300 மதிப்பெண்களுக்காக நடத்தப்படுகிறது. முதல் தாளில் 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
முதல் தாளில் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்த மாணவரது அறித்திறனை பரிசோதிக்கும் வகையில், கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் அவரவர் பாடப்பிரிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு நேரம்: மொத்தம் 3 மணிநேரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

விபரங்களுக்கு: https://www.nta.ac.in/ , https://ugcnet.nta.nic.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews