ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 07, 2021

Comments:0

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
C தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தல்! குமரி மாவட்டத்தில் சுமார் 16,120 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர் 90 பேருக்கு நேற்று முன் தினம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
C தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தல்!
குமரி மாவட்டத்துக்கு முதற்கட்டாக 21 ஆயிரம் டோஸ் வந்திருந்தது. இவற்றில் 10 ஆயிரம் டோஸ்கள் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினருக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது 11 ஆயிரம் டோஸ், பயன்பாட்டில் உள்ளன. தேர்தல் பணி அலுவலர்கள் தவிர, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் 45 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2 பேருக்கு கொரோனா : இதற்கிடையே அமித்ஷா வருகையையொட்டி அவரது நிகழ்வில் பங்கேற்கும் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அவர் தங்கும் ஓட்டலில் உள்ள பணியாளர்களுக்கு நேற்று முன் தினம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 2 பேருக்கு கொரோனா இருந்தது உறுதியானது. அறிகுறி இல்லாத கொரோனா என்பதால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
C தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தல்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews