நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்.!
‘நீட்' தேர்வு விண்ணப்பம் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் நாளை(மார்ச் 11) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்; இதுகுறித்த கூடுதல் 5 https://nta.ac.in இணையதளத்தில் அறியலாம்; ஹால் டிக்கெட் மே 1ம் தேதி வெளியிடப்படுகிறது..!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் நாளை (மார்ச் 9) முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் ராணுவ நர்சிங் படிப்பு மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் சேர்க்கைக்கு என்டிஏ சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக மார்ச் 9 முதல் 11-ம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். இதனை என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.