சென்னை:தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை உள்ளிட்ட அரசு பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு, ஒற்றைச் சாளர முறையில், 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், இந்த மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், அரசு உதவி இன்ஜினியரிங் கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆன்லைன் வழியிலான சேர்க்கை துவங்கிஉள்ளது.
அண்ணா பல்கலை நடத்திய, 'டான்செட்' நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இந்த சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், https://www.tn-mbamca.com/ என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.