தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பில் சேர பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனிதவள மேலாண்மை, நிதி சேவை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்பிஏ படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்சிஏ படிப்புக்கு பிசிஏ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். மேலே குறிப்பிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நுழைவுத்தேர்வு ஏதும் கிடையாது.
ஆன்லைன் விண்ணப்பம்
மாணவர்கள் ஆன்லைன் (http://cde.annauniv.edu) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புக்கு ஏப்.15-ம் தேதிக்குள்ளும், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏப். 21-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஏப்.18-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
கலந்தாய்வு ஏப்.24-ம் தேதி நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் கல்வி மையங்கள் செயல்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Search This Blog
Friday, March 26, 2021
Comments:0
Home
Application
MBA/MCA
Universities
தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை
தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.