காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் The teachers besieged the collector's office to fill the vacant posts
தமிழகம் முழுவதும் இந்த வருடம் 2024-25 நிலவரப்படி 25 ஆயிரத்து 33 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளநிலையில் வெறும் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே நியமன தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான எந்த ஒரு தேர்வும் நடத்தப்படாத நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் காலி பணியிடங்கள் மிக குறைவான அளவிலேயே உள்ளதால் அதை அதிகரிக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் இருந்து நியமன தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மனு பெட்டியில் போட்டு சென்றனர்.
மேலும்,இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவ லின்படி, தமிழ் பாடத்தில் 1447, ஆங்கிலம் பாடத்துக்கு 753, கணித பாடத்தில் 577, அறிவியல் பாடத்தில் 1680, சமூக அறிவியல் பாடத்துக்கு 1163 என மொத்தம் 5620 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உயர்த்தி படித்த பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண் டும்", என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.