CBSE announces strike, abolition movement to insist on old pension scheme - பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி நாளை மறியல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், அதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை மாவட்ட தலைநகரங்களில் ரோடு மறியலில் ஈடுபட உள்ளதாக சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தெரிவித்தார். தேனியில் அவர் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த பிப்., பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ககன்தீப்சிங்பேடி தலைமையில் மூவர் குழு அமைத்தனர்.
இந்த குழு செப்.,ல் அறிக்கை தாக்கல் செய்யும் என்ற நிலையில் மேலும் 3 மாத அவகாசம் தேவை என்கின்றனர். இதனால் ஜனவரியில் காலதாமதம் ஏற்படும். அதன் பின் தேர்தல் வந்துவிடும். அப்போது மீண்டும் எங்களுக்கு ஓட்டளித்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்பார்கள். இந்த மூவர் குழுவை கலைக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தவில்லை என்றால் 1988 ல் சென்னையில் நடந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் போன்று மீண்டும் போராடும் நிலை ஏற்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இன்று சென்னையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மறியல் செய்கின்றனர். நாளை(அக்.,16) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் மாவட்ட நிர்வாகிகள் மறியல் நடத்த உள்ளனர் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.