தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01-04-2003க்கு (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு) முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் - Eligible Pension and Family Pension may be granted to 3618 employees who were scheduled before implementation of Contributory Pension Scheme.
பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், நகராட்சிகளில் துப்புரவு பணியிடங்களைத் தோற்றுவிக்க நகராட்சி நிர்வாக இயக்குநரை அனுமதிப்பதும், அப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களை அமர்த்துவது குறித்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை இரண்டில் காணும் அரசாணையில்,
நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணியாளர்கள் / பணியிடங்கள் தோற்றுவிக்க அளவுகோல் நிர்ணயித்தும் இதன் அடிப்படையில் பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்துவது குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. பார்வை மூன்றில் காணும் அரசாணையில், இதே போன்று தெரு விளக்கு
பராமரிப்புப் பணியிடங்கள் / பணியாளர்களுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.
3. பார்வை நான்கில் காணும் அரசாணையில், பார்வை ஒன்றில் காணும் அரசாணைக்கு திருத்தங்கள் வெளியிடப்பட்டன. 4. பார்வை ஐந்தில் காணும் அரசாணையில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் மற்றும் மாதம் ரூ.2,000/- என்ற தொகுப்பூதியத்தில் நுழைவுப் பணியிடங்களில் அவர்களை பணியில் அமர்த்தி ஓராண்டு பணிமுடித்த பின் முறையான ஊதிய விகிதத்தில் பணியில் அமர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.
5. மேற்கண்டவாறு அரசாணைகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணியினை பின்னர் வெவ்வேறு காலங்களில் பணிவரன்முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், பின்னர் வெளியிடப்பட்ட பார்வை ஆறில் காணும் அரசாணையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக/தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்களின் பணியினை அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அதாவது 23.02.2006 முதல் பணி வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது.
6. மேற்காணும் அரசாணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு 30.05.2017 தேதிய ஆணையில் (Review Application No.87 of 2014 in W.A (MD) No.729 of 2013 and others), தூய்மைப் பணியளார்களின் பணியினை நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதிய காலம் முடிந்த நாளிலிருந்து வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் தனது 30.08.2017-ஆம் தேதிய ஆணையில் (SLP (Civil) No.21249 of 2017), இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 7.எனவே,01.04.2003-க்குப் பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமுலில் இல்லாததால், மேற்காணும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் பெறப்பட்ட ஓய்வூதிய செயற்குறிப்புகள் உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநரால் திருப்பி அனுப்பப்பட்டன. இப்பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட நாள் 23.02.2006 கருத என வேண்டுமா என்பது குறித்து உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.
8. இதுகுறித்து, நகராட்சி நிர்வாக இயக்குநரை கலந்தாலோசித்ததில், நகராட்சிகள் 1 மாநகராட்சிகள் (சென்னை தவிர) 30.04.1997-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் தகுதிவாய்ந்த ஓய்வூதிய பலன்கள் / அவர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என்றும், இதுகுறித்து உரிய தெளிவுரையினை உள்ளாட்சி நிதித்தணிக்கை இயக்குநருக்கு அளிக்கலாம் எனவும் நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
9.மேலே பத்தி 8-ல் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரின் செயற்குறிப்பினை கவனமாக பரிசீலித்தது, பார்வை ஒன்று முதல் ஐந்து வரை உள்ள அரசு அரசாணைகளின் அடிப்படையில் பரிசீலினைக்குப் பின், அதனை ஏற்று. நகராட்சிகள் / மாநகராட்சிகளில் 30.04.1997-ஆம் தேதிக்குப் பின்னர் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் (அதாவது புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்) பணிவரன்முறைப்படுத்தப்பட்டு முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்ட 1.779 நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் 20 மாநகராட்சிகளைச் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) சேர்ந்த 1839 பணியாளர்களுக்கும் தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு தங்களுக்கு அரசால் தெளிவுரை வழங்கப்படுகிறது.
10. இதுகுறித்து அனைத்து தனிப்பட்ட ஓய்வூதிய கருத்துருக்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது சம்பந்தப்பட்ட நகராட்சிகள் / மாநகராட்சிகளின் பொறுப்பாகும் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.