பிபிஏ, பிசிஏ படிப்புக்கு அங்கீகாரம் கோரி கல்லூரிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஏஐசிடிஇ அறிவிப்பு Extension of deadline for colleges to apply for recognition of BBA, BCA course: AICTE notification
பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்(ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25 கல்வி ஆண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், ஏஐசிடிஇ அனுமதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும். இதற்கான விண்ணப்ப பதிவுகடந்த டிசம்பர் மாதம் தொடங்கிநடைபெற்று வருகிறது. மேலும்,கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு இணையதள வழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (பிப்.26) நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 7-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேநேரம்மத்திய, மாநில அரசு பல்கலைக் கழகங்கள் இந்த அனுமதியை பெறத் தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇ திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.