10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 28, 2023

Comments:0

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு? 10th, 11th and 12th General Examination - Decision to give marks according to attendance record?



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.

நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews