தமிழக அரசு நிதி உதவியுடன்
கூடலூர் அரசு பள்ளி மாணவி மலேசியாவில் படிக்க வாய்ப்பு
A news article reports that K. Prema, a student from a government school in Gudalur, has secured an opportunity to study Data Science at Albukhary International University in Malaysia with financial assistance from the Tamil Nadu government.
Prema, daughter of tea estate workers, excelled in her studies, scoring high marks in the 10th standard public exam.
A felicitation ceremony was held at her former school, attended by local MLA Pon. Jayaseelan and other officials.
The state government will cover the expenses for her higher education abroad.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளி யின் முதல் மாணவியாக தேர் வானவர் க.பிரேமா. இதனைத் தொடர்ந்து குன்னூர் மாதிரி பள்ளியில், பிளஸ் 2 வரை படித்த பிரேமா, மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் படிப்பதற் காக நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேயிலை தோட்ட தொழிலா ளர் வம்சாவளியைச் சேர்ந்த கணேஷ்மூர்த்தி -பரமேஸ்வரி தம்பதியின் மகளான பிரேமா வின் இந்த சாதனையை பாராட் டும் வகையில், அவர் படித்த புளி யம்பாறை அரசு உயர்நிலைப்
தமிழக அரசின் நிதியுதவியுடன், மலேசியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி படிக்க தேர்வாகியுள்ள மாணவி பிரேமாவிற்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளியில் விழாநடந்தது. கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன், நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலு
வலர்(பொ)விஜயகுமார், கல்லூரி பேராசிரியர்கள் அர்ஜுனன், மகேஸ்வரன், பள்ளிமேலாண்மை குழு தலைவர் தமிழ்மணிமற்றும்
உறுப்பினர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் கூறும்போது. "அரசுபள்ளி யில் படித்து தனது திறமையால் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள பிரேமா, மலேசிய பல்கலைக்கழகத்தில் நான் காண்டு பட்டப்படிப்பான தரவு அறிவியல் (பேச்சுலர்ஸ் இன் டேட்டா சயின்ஸ்) படிப்பினை படிக்கவுள்ளார். இதற்கான செல வினை தமிழக அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மாணவி பிரேமா பேசும்போது. தோட்டத்தொழிலாளியின் குடும் பத்தில் பிறந்த எனக்கு, வெளிநாட் டில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கும், என்னை ஊக்கப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசி ரியர்களுக்கும் நன்றி என்றார்.
Sunday, February 15, 2026
தமிழக அரசு நிதி உதவியுடன் கூடலூர் அரசு பள்ளி மாணவி மலேசியாவில் படிக்க வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.