10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின், தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை 14.02.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 14, 2026

Comments:0

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின், தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை 14.02.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின், தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை 14.02.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ந.க.எண்.013061/81/2025

. 13.02.2026

ஐயா / அம்மையீர்,

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை 6 மார்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-தேர்வெண்ணுடன் கூடிய ieroft மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக

பார்வை:

1. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்: 31.10.2025

2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட& கடிதம் .19.11.2025. 27.11.2025. 16.12.2025 29.12.2025

பார்வை 1,2-ல் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகள் மற்றும் கடிதங்களில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

தற்போது. மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை 14.02.2026 பிற்பகல் முதல் 18.02.2020 வரையிலான நாட்களில் dgeapptnschools.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பள்ளியின் User id மற்றும் Password-ஐ Login செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களை சார்ந்த அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மைக் கல்வி அலுவலர் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓம்/-இயக்குநர்

நகல்:

1. மாநில திட்ட இயக்குநர்.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6

-தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

2. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6

3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6 தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.

4. அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், அனைத்து மாவட்டங்கள். -தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

5. உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள். அனைத்து மாவட்டங்கள்.

(மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) வழியாக)

This official letter from the Directorate of Government Examinations, Chennai, informs school headmasters about downloading the student name list with exam numbers for the March/April 2026 Tenth Public Examination.

Download the name list with exam numbers from dgeapptnschools.gov.in.

The download window is open from February 14, 2026, afternoon to February 18, 2026.

Headmasters must use their school's User ID and Password to log in and download the list.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews