பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டத் தைச் செயல்படுத்தினால், விவசாயிகளிடம் இருந்து அனைத்து பாலையும் கொள்முதல் செய்ய முடியும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரி வித்தார்.
அந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் அவர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப் போது அவர் பேசியது:
ஆவின் நிறுவனம் மூலமாக பாக்கெட் பால் விநி யோகம் நாளொன்றுக்கு 26 லட்சம் லிட்டராகவும், உதிரிப் பால் விற்பனை விநியோகம் 4 லட்சம் லிட்டராகவும் உள்ளது. பள் ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்யும். இதனால், ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு ஏற்படுத்த முடியும். ஆவினில் செயல்படக் கூடிய 25 கூட்டுறவு ஒன்றியங்கள் அனைத்தும் விற்பனையை அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும். இந்த ஒன்றியங்களில் 9,399 பால் கூட்டுறவு சங்கங்கள் இணைந்துள்ளன. அவற்றில் 4.36 லட்சம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆவின் மூலமாக தமிழ்நாட்டின் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாதந்தோறும் ரூ.400 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறுவதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடை, மீன்வளம், பால்வ ளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர், ஆவின் நிர் வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.