தமிழகத்தில் பள்ளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி வேலை நாட்கள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி வேலைநாட்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் ஆகிய நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் பள்ளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டம் நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் பள்ளி வேலை நாட்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழகத்தில் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும். ஞயிற்று கிழமை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் பொது விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பள்ளிகளில் வேலைநாட்கள் நீடிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பள்ளிகளில் பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Thursday, January 21, 2021
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
SCHOOLS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.