அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – முதல்வருக்கு கோரிக்கை!!
புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தவறாது ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு சம்பளம்:
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 4 முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவை கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்.
இதில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஆசிரியர்களின் சம்பளம் குறித்து முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை மாதந்தோறும் தாமதமின்றி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி நிலுவையில் உள்ள ஊதியத்தையும் உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் மாத ஊதியம் எவ்வித கால தாமதமும் இன்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.
Search This Blog
Thursday, January 21, 2021
Comments:0
Home
SALARY/INCREMENT
TEACHERS
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – முதல்வருக்கு கோரிக்கை!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – முதல்வருக்கு கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.