பல்கலைக்கழக மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நெறிமுறைகள் 2018-ஐ அமல்படுத்த உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதிய நெறிமுறைகள் 2018:
பல்கலைக்கழக மானிய குழு சார்பில் புதிய நெறிமுறை 2018-ஐ அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் கழகம் கோரிய திருத்தங்களுடன் அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “யூஜிசி நெறிமுறைகள் 2018-யை அமல்படுத்த கோரி ஆசிரியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அந்த அரசாணையை அமல்படுத்த தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய நெறிமுறைகள் மூலம் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் மேற்படிப்புகளுக்கான ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படும். அவர்கள் பொதுவாக 12 ஆண்டுகள் பேராசிரியராக பதவி வகித்தால், இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற முடியும். இந்த காரணத்தால் பதவி உயர்வு பெறாமலே ஓய்வு பெரும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய அரசாணை காரணமாக இவர்கள் 3 ஆண்டுகள் மற்றும் பணியாற்றுவதால் இணை பேராசிரியராக பணியாற்ற முடியும்.
எனவே இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித் துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, January 21, 2021
கல்லூரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளில் பதவி உயர்வு – யூஜிசி நெறிமுறைகளின் அரசாணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.