Breaking

Tuesday, October 20, 2020

5 ஆண்டு சட்டப்படிப்பு கவுன்சிலிங் துவங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நேற்று துவங்கியது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை வளாகத்தில், சீர்மிகு சிறப்பு சட்டப்பள்ளி உள்ளது. இங்கு, நான்கு வகை, எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' ஐந்தாண்டு படிப்புகளுக்கு, 800 இடங்கள் உள்ளன.அவற்றுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றுக்கு மொத்தம், 5,283 பேர் விண்ணப்பித்தனர்.அதேபோல், மாவட்டங்களில் செயல்படும் சட்ட கல்லுாரிகளில், 2,000 எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புகளுக்கு, 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. நேற்று, ஆன்லைன் வழி கவுன்சிலிங் துவங்கியது. சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கவுன்சிலிங்கை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான, கட் ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல், இ - மெயில், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog