மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவசியமான, 'நீட்' தேர்வுக்கு, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புக்கள், தமிழகத்தில், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இலக்கை குறிக்கோளாக கொண்டு முயற்சி செய்யும் மாணவர்கள், இந்த தேர்வில் சப்தமின்றி சாதித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியரின் கருத்துக்கள் இதோ:
எஸ்.மகாலட்சுமி, 115/720, அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய பெருங்களத்துார்
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியையின் அறிவுரைப்படி, நீட் தேர்வு எழுத விரும்பிய எனக்கும், என்னுடன் பயிலும், சக மாணவன் ஒருவருக்கும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.அதில், ஆசிரியர்கள், தேர்வுக்கு உண்டான பொது அறிவு கேள்விகள் மற்றும் உயிரியல் பிரிவு கேள்விகள் குறித்து, விளக்கமாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாதிரி தேர்வுகளும் நடந்தது. இதுவே, நான் தேர்வில் வெற்றி பெற உதவியது. பல் மருத்துவம், மயக்கவியல், பிசியோதெரபி ஆகிய துறைகளில், ஏதேனும் ஒன்றில் படிக்க முடிவு செய்துள்ளேன். கே.மாதுரி, 520 /72௦, சேலையூர்
பள்ளி ஆசிரியர் -- ஆசிரியைகள் அளித்த ஊக்கமே, வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தது. பள்ளி நேரம் முடிந்தவுடன், தினசரி மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தப்பட்டன.இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள், அனைத்து சந்தேகங்களுக்கும், உரிய நேரத்தில் விடை அளித்ததுடன், தேர்வை கையாள வேண்டிய விதம், உத்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மருத்துவம் படித்து எதிர்காலத்தில், தோல் நோய் சிறப்பு நிபுணராக வேண்டும் என்பதே என் லட்சியம்.
எஸ். சாமுவேல் ரொசாரியோ, 683 /720, சேலையூர்
பிளஸ் 1 படித்த போதே, நீட் தேர்வில் வெற்றி பெற, தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், மாலை நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில், முழு நேரமும் வகுப்புகள் நடந்தன.பயிற்சி மையத்தில் படித்தாலும், பள்ளியிலும், தேர்வில் வெற்றி பெற உதவினர். பிளஸ் 2 பாடத்திட்டங்கள் நடத்தப்பட்ட போதே, நீட் தேர்விற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது, தேர்வை எதிர்கொள்ள உதவியாக அமைந்தது.இரண்டு ஆண்டுகள் கடுமையான முயற்சிக்கு பின், வெற்றி பெற்றுள்ளேன். மருத்துவம் படித்து, எதிர்காலத்தில், இதயவியல் நிபுணராக வேண்டும் என்பதே என் லட்சியம். எஸ்.ரோஷினி, 493/720, ராயபுரம்
கடந்த ஆண்டு நீட் தேர்வில், எனக்கு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. எனவே, தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றேன். நீட் தேர்வு பயிற்சிக்கு தயாராகும் முன், படிக்க, துாங்க, பயிற்சி தேர்வு எழுத என, முதலில் நேரத்தை திட்டமிட வேண்டும்.வீட்டு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், அதற்காக, தேர்வு பயிற்சி திட்டத்தை, எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. பாடத்தில் சந்தேகம் இருந்தால், உடனடியாக தகுந்த ஆசிரியரிடம் அதை கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பின் கேட்டு கொள்ளலாம் என, தள்ளிப்போட கூடாது.அன்றைக்கு நடத்தும் பாடங்களை, அன்றே படித்து முடிக்க வேண்டும். அதையும் தாண்டி, நீட் தேர்வுக்கு என, பல்வேறு புத்தகங்கள் உள்ளன. அதையும் படிக்க வேண்டும்.'மைனஸ்' மதிப்பெண்கள் பெறாமல் பார்த்து கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். - நமது நிருபர்கள் குழு - 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.