முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, கடைசி கட்ட கவுன்சிலிங் நடத்த அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, தமிழக அரசை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கோவையைச் சேர்ந்த, டாக்டர் எஸ்.அரவிந்த் தாக்கல் செய்த மனு:முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு என, இரண்டு கட்டங்களாக, கவுன்சிலிங் நடத்த வேண்டும். மீதி உள்ள இடங்களுக்கு, இறுதி கட்டமாக கவுன்சிலிங் நடத்த வேண்டும்.நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கடைசி கட்ட கவுன்சிலிங், இதுவரை நடக்கவில்லை. கவுன்சிலிங் நடத்தாவிட்டால், விடுபட்ட இடங்கள் எனக் கூறி, கல்லுாரி நிர்வாகங்களின் விருப்பப்படி சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்;
அது, நியாயமற்றது.உத்தரவுஎனவே, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கையை முடிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, டாக்டர் கீதாஞ்சலி என்பவரும், மனு தாக்கல் செய்திருந்தார்.இரண்டு மனுக்களும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், மருத்துவக் கல்வி இயக்குனர் சார்பில், சிறப்பு பிளீடர் மனோகரன், தேர்வுக் குழு சார்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் வகுத்த கடைசி தேதி, ஆக., 31 என்பதால், கடைசி கட்ட கவுன்சிலிங் நடத்த இயலாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, கடைசி கட்ட கவுன்சிலிங் நடத்துவதற்காக, அவகாசத்தை நீட்டிக்கும்படி, மாநில அரசு கோரலாம். அவ்வாறு செய்வதால், தகுதியுள்ள மாணவர்களுக்கு நீதி கிடைக்கும். நடவடிக்கைஎனவே, அவகாசத்தை நீட்டிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்ய, நடவடிக்கை எடுக்கும்படி, அட்வகேட் ஜெனரலை, இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாணவர்கள் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.விசாரணை, வரும், 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews