அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்காணித்து, அறிக்கை அளிக்குமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்களில், நேரடியாக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனுமதி : இந்நிலையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், 40 சதவீத கட்டணத்தையே, தற்போது வசூலிக்க வேண்டும் என, கட்டுப்பாடு விதித்தது.ஆனால், பல பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கட்டணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்த, கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றன. இதுகுறித்து, புகார்கள் அதிகரித்துள்ளன.பள்ளிக் கல்வித் துறை மற்றும் கல்விக் கட்டண நிர்ணய கமிட்டி உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுக்கு, பெற்றோர் புகார் அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து, உயர்நீதிமன்றத்திலும் பெற்றோர் முறையிட்டு உள்ளனர்.கண்காணிப்புஇதையடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைப் பின்பற்றி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறினால், அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் புகாருக்கு உள்ளாகும் பள்ளிகளைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதுடன், உரிய அறிக்கை தாக்கல் செய்யவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups