Breaking

Monday, August 10, 2020

சுதந்திர தின கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க தேவையில்லை: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுதந்திர தின கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தேவையில்லை. 500-க்கும் குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. சுதந்திர தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். -நாட்டின் சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்த விழாவில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு தனது கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. எனவே போலீசாரின் அணிவகுப்பு மரியாதை போன்ற நிகழ்வுகளை மாவட்டங்களில் நடத்துவது சிரமமான காரியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, போலீசாரின் மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்வை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக, குழந்தைகள், பள்ளி மாணவர்கள் பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேவையில்லை.மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 500-க்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog