Breaking

Wednesday, May 06, 2020

டாஸ்மாக் திறக்கலாம், ஆனால்... நீதிமன்றத்தின் நிபந்தனைகள் பட்டியல் இதோ!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாஸ்மாக் கடையை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சில நீதிபதிகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது வாங்க வரும் வாடிக்கையாளரின் ஆதார் எண், பெயர், முகவரியை ரசீதில் பதிவிட வேண்டும். வாடிக்கையாளரிடம் ஒரு நகல், மறறொன்றை பில் புத்தகத்தில் இணைக்க வேண்டும். தினந்தரும் பில் புத்தகத்தின் நகலை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அதன்படி, மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவருக்கு மதுபானம் விற்க வேண்டும். வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும் என நிபந்தனை. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்துவோருக்கு 2 மதுபாட்டில்கள் வழங்கலாம். மதுபான விற்பனையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். விதிமீறல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும். மேலும் டாஸ்மாக்கை திறக்க தடைகோரிய வழக்கு வரும் 14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog