👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்த, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் அறிவியல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன. அறிவியல் திறன்களை வெளிப்படுத்த, அவரவர் தாய்மொழியின் மூலம் செயல்பாடுகளை பதிவு செய்வதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டன.
இதை மையமாகக் கொண்டு அறிவியல் பலகை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், தங்களின் அறிவியல் செயல்பாடுகளை தமிழ் மொழியிலும், வெளிப்படுத்த, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கூடுதல் தகவல்களை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை, 99424 67764 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.