தன்னார்வலர்களாக பணியாற்ற பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 04, 2020

Comments:0

தன்னார்வலர்களாக பணியாற்ற பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊதியம் கொடுத்தும் பெற முடியாத நிலையில் - 11,700 பகுதி நேர ஆசிரியர்கள். அரசு ஊதியம் கொடுத்தும் பெற முடியாமல் 11 , 700 பகுதி நேர ஆசிரியர்கள் தவித்து வருவதாகவும் இதுகுறித்து உடனடி நட வடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் . தமிழகத்தில் அரசாணை177 நியமனத்தின் கீழ் 16 , 549 பகுதி நேர ஆசி ரியர்கள் ரூ . 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தமிழக அரசுப்பள்ளிகளில் 2012 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்கள். பல்வேறு காரணங்களால் சிலர் பணியிலிருந்து விலகிய பிறகு தற் போது 11700பேர்மாநிலம் முழுவதும் உடற்கல்வி , ஓவியம் , இசை ஆசி ரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகின்றனர் . அவர்க ளுக்குத் தற்போது மாத தொகுப்பூதியமாக ரூ . 7700 வழங்கப்பட்டுவரு கிறது . இந்தத் தொகை மாநிலத் திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது .
இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்கம் ( எஸ்எஸ்ஏ ) கணக்கில் வரவு வைக்கப்படும் . பின்னர் பள்ளிகளின் மேலாண்மைக்குழு ( எஸ் எம்சி ) கணக்குகாசோலையில் சம்பந்தப்பட்டதலைவர்மற்றும் செயலர் கையொப்பம் பெற்று இறுதியில் பகுதிநேர ஆசிரியர்களின் கணக்கில் சம்பளமாக வழங்கப்படுகிறது . இந்தத் தொகையை ஒவ்வொருபள்ளியி லும் உள்ள ஆசிரியர்கள் எஸ்எம்சி வழங்கும் காசோலையை வங்கியில் செலுத்தி சம்பள தொகையைப் பெற்று வந்ததால் இதுவரை பிரச்னை இல்லை . ஆனால் இந்த மாதம் கரோனாதடுப்பு நடவடிக்கைக்கான 144 தடை உத்தரவால் மார்ச் மாத சம்பளக்காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் எஸ்எம்சி தலைவரும் பள்ளிக்கு வராததால் பள் ளிக்கணக்கில் சம்பளப் பணத்தினைச் செலுத்திய பிறகும் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்படா மல் சிக்கலில் உள்ளது . இதனால் அவர்கள் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றித் தவித்து வருகிறார்கள்.
எனவே எஸ்எம்சிகணக்கில் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும் இனிவரும் காலங்களில் வட்டார வளமையங்கள் மூலமாக பகுதி நேர ஆசிரியர்க ளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என தமிழ் நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சி . செந்தில்குமார் , தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி . கே . இள மாறன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில், தன்னார்வலர்களாக செயல்பட, பகுதி நேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை:கொரோனா நோய் பரவலை தடுக்க, பிரதமரும், முதல்வரும் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கொரோனா தடுப்புப் பணியில், தன்னார்வலர்களாக பணியாற்ற, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் விரும்புகிறோம். இதை, பள்ளி கல்வித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைஉத்தரவு காரணமாக, பள்ளிகள் நடக்காத சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மார்ச் மாத சம்பளம் விரைவாக கிடைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதியத்தையும், தடையின்றி வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews