Breaking

Friday, April 03, 2020

அடுத்த அதிரடி என்ன? வீடியோ செய்தியை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலமாக மக்களிடம் பேச உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி கரோனா வைரஸ் நாடு முழுக்க பரவி வருவதால் ஏற்கனேவே ஒரு நாள் சுய ஊரடங்கு குறித்து பேசினார். பின்னர் 21 நாட்கள் தொடர் ஊரடங்கிற்காகவும் பிரதமர் மோடி நேரலையில் பொதுமக்களிடையே பேசினார். மேலும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இதனை நீட்டிக்க முடிவு செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். வீடியோ மூலம் நட்டு மக்களுக்கு சிறு செய்தி சொல்லவிருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog