👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆர்.எஸ்.மங்கலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மாவட்ட அளவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஓவிய போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் விஷால் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். தொண்டியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில், இப்பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட 8ம் வகுப்பு மாணவர் முகமது ஆதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
ஏற்கனவே அறிவியல் ஆய்வு கட்டுரையின் மாநில அளவில் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சுவாமி விவேகானந்த கேந்திரா என்ற அமைப்பு தமிழக அளவில் பள்ளி மாணவர்களிடம் நற்குணத்தை பரப்புவதற்காக நற்குண நாயகர் விவேகானந்தர் என்ற தலைப்பில் திறன் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வில் கலந்து கொண்ட இப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். அதில் 12 மாணவர்கள் வெற்றி பெற்று வெற்றிக்கான சான்றிதழை பெற்றனர். தனித்திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஐன்ஸ்டீன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தலைவர் சசிக்குமார், செயலாளர் பகுர்தீன், பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பெற்றோர் பாராட்டினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.