👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை, அரசு கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த வக்கீல் அப்பாஸ் மந்திரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, தேர்வுகளில் 175 வினாக்கள் பொது அறிவு பிரிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும். இதனால், பழைய பாடத்திட்டத்தில் இருந்த 100 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டிருந்த தமிழ் வினாக்கள் இனி இருக்காது.இதேபோல் 100 மதிப்பெண்ணிற்கு மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே குரூப்-2 போட்டித்தேர்வுக்கு தயாரான தமிழக இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிப்பர். 100 மதிப்பெண்ணிற்கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால் பெரிதும் பாதிப்பை சந்திப்பர். பலரால் உரிய இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்பர். எனவே, குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்தும், பழைய முறையிலேயே தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் பணியாளர் நலன் சார்ந்தது. அரசு தரப்பு ஆய்வுக்கு பிறகே முடிவெடுத்திருக்கும். இது அரசின் கொள்ைக முடிவோடு தொடர்புடையது. நிபுணர்களின் பரிந்துரைகள் இருந்திருக்கும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதேநேரம், மனுதாரரின் கோரிக்கை குறித்து பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் மனு அடிப்படையில் இவர்கள் எடுக்கும் முடிவை, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் , மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு பாடத்திட்டமாகவும் இருக்கும்.ஆனால் புதிதாக TNPSC அறிவித்துள்ள குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பாடத்திட்டத்தின்படி 175 பொதுஅறிவு கேள்விகளும் , 25 கேள்விகள் திறனறிவுக் கேள்வியாகவும் புதிய பாடத்திட்டம் உள்ளது.
எனவே இதை குறிப்பிட்டு அந்த மனுவில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் , கிராமப்புற மாணவர்கள் அதிகமானோர் குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் தமிழ் வினாக்கள் நீக்கப்பட்ட்து மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். ஆகவே குரூப் 2 தேர்வுக்கான பாடத் திட்டத்தில் 100 மதிப்பெண் களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டுமென்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் , கிருஷ்ணசாமி இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் இந்த மனு தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என்று உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.