இலவச துணிப்பை வழங்கிய 5ம் வகுப்பு மாணவன் | கலெக்டர் நேரில் பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 22, 2019

இலவச துணிப்பை வழங்கிய 5ம் வகுப்பு மாணவன் | கலெக்டர் நேரில் பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிவகங்கை அடுத்துள்ள நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், தனது மனைவி மற்றும் மகன் தனுஷ்குமாருடன் துபாயில் வசித்து வருகிறார் . இவரது மகன் துபாயில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் தனது சொந்த சொந்த ஊரான நாலுகோட்டை கிராமத்திற்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது நாலுகோட்டையில் உள்ள ஏரி, குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த 5ம் வகுப்பு மாணவனான தனுஷ் குமார் , பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததைக் கண்டு வருந்தியுள்ளார். பின்னர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்
பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்பதற்காக, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து மொத்தமாக துணிப்பைகளை வாங்கிய தனுஷ்குமார், அந்த துணி பைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களைப் பொறித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வர ஆரம்பித்தார். அதன்படி சிவகங்கை வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு தனுஷ்குமார், துணிப்பைகளை விநியோகித்துக் கொண்டிருந்ததைக் கேள்விபட்ட மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அங்கே நேரில் சென்று மாணவர் தனுஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் இந்த செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews