Breaking

Wednesday, July 22, 2026

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரத்திற்கு எதிர்பார்ப்பு - கை கொடுக்குமா த.வெ.க., அரசு?



This news article in Tamil discusses the demand by roughly 12,000 part-time teachers in Tamil Nadu for permanent employment.

The teachers, initially hired for technical subjects like physical education, computer science, and art, are seeking to be made permanent staff with regular salary scales.

The article mentions that these teachers have been working for 16 years and are seeking regular salary scales, as they currently receive a salary of ₹15,000.

The Tamil Nadu Part-time Teachers' Federation is asking the government to fulfill its promise to regularize their employment in the upcoming budget. 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரத்திற்கு எதிர்பார்ப்பு

கை கொடுக்குமா த.வெ.க., அரசு

மதுரை, ஜூலை 22-

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியை நம்பி 16 ஆண்டுகளாக ஏமாந்த நிலையில், த.வெ.க., தாக்கல் செய்யும் பட்ஜெட்டிலாவது பணிநிரந்தர அறிவிப்பு வருமா என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் 2011 - 2012 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, ஓவியம் உட்பட தொழில்கல்வி பாடங்களுக்கு 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதிய சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களை பணிநிரந்தரம் செய்வதாக அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து தொடர்ந்து ஏமாற்றின. ஆனால் தி.மு.க., ஆட்சியில் இரு முறை உதவித் தொகை எனக் கூறி தற்போது சம்பளம் ரூ.15 ஆயிரமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திலும் முரண்பாடு நிலவுகிறது. பணி நிரந்தரம் கோரிக்கையை இரண்டு கட்சிகளும் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

16 ஆண்டுகளாக பணிபுரியும் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் நிரந்தரமாக்க வேண்டும். இதே பாடங்களுக்கு காலமுறை சம்பளத்தில் நியமிக்கப்பட்ட சிறப்பாசிரியர்கள் தற்போது ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். ஒரே கல்வித் தகுதி, ஒரே பாடங்களை கையாளும் ஆசிரியருக்கு இடையே உள்ள இந்த சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.

'த.வெ.க., ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளை நிறைவு செய்த தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவர்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., போல் ஏமாற்றாமல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வரும் பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog