Breaking

Monday, July 15, 2019

Facebook- பயனாளர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு.. ரூ.3 லட்சம் கோடி அபராதம்.. FTC அதிரடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது. ஆமாங்க.. பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது. சர்வதேச அளவில் பல சமுக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது ஃபேஸ்புக் மட்டுமே என்றே கூறலாம்.
சமீபத்தில் முகநூல் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகியது. இது பல சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்பிரச்சனை சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது என்றும் கூறலாம். முகநூல் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 87 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்த நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் விசாரித்து வந்தது. எனினும் இதுவரை வெளியான இந்த செய்தி குறித்து ஃபேஸ்புக் எந்தவித கருத்தும் தெரிவிக்க ஏதுமில்லை என்று முகநூல் மற்றும் மத்திய வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது கவனிக்கதக்கது.
ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை கமிஷன் விதிக்கும் அதிகபட்ச அபராத தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012ல் கூகுள் நிறுவனம் அதன் பயனாளிகளின் தகவல் வெளியானது எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு 22.5 மில்லியன் டாலர் அந்த சமயம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த 2018 ஆம் ஆண்டு வருவாயில் 9 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஒரு புறம் இது குறித்து பல சர்ச்சைகள் பல கருத்துகள் வெளியிடப்பட்டாலும், மறுபுறம் தொடர்ந்து பேஸ்புக் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதனால் இதற்கு தகுந்தாற் போல் அடிப்படை கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog