👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக இளைஞர்களுக்கு தெளிவான சிந்தனை வேண்டும். தான் என்னவாகப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நிறைய பேர் பி.காம் படிப்பில் சென்று சேருகின்றனர். காரணம், பி.காம் படித்தால் வங்கி வேலைக்கு போகலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் பிகாம் படிப்புக்கும், வங்கி வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தற்போது பி.காம் படிப்பில் தான் அதிகமானோர் சேர்கின்றனர். மத்திய, மாநில அரசு பணிக்கு செல்ல வேண்டுமானால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். பிளஸ் 2 படிப்புக்கே 50 சதவீதம் அரசு வேலைக்கு செல்லக்கூடிய தகுதி பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும்போது தேர்வுகள் எழுத வேண்டும். தற்போது என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று பார்த்து படிப்பதில்லை. அரசு பணிகளில் டைப்பிங், கம்பியூட்டர் டிடிபி போன்ற படிப்புகள் படித்தவர்கள் யாரும் இல்லை.
இது போன்ற வேலையை கேவலமாக நினைக்கிறார்கள். ஆனால் ஏசி ஷோரூமில் ₹7 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று இளைஞர்கள் நினைக்கின்றனர். எனவே எந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று பார்த்து படிப்பதில்லை. இதனால் ஒவ்வொரு துறைகளிலும் நிறைய ஆள் பற்றாக்குறை உள்ளது. இதை வட மாநிலத்தவர்கள் பயன்படுத்தி கொள்ள தவறுவதில்லை. இதை நாம் புரிந்து ெகாள்ள வேண்டும்.
வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்வு முறைகள் இந்தி, ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்கள் இந்தியில் சரியாக பதில் அளித்து தேர்ச்சி பெறுகின்றனர். நம்முடைய இளைஞர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகிறார்கள். எனவே ஆங்கிலம் நன்றாக படிக்க வேண்டும். வடமாநிலத்தில் ஆங்கிலம் பேச, எழுத தெரிந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்திகளில் தேர்வு எழுத முடியாது தான். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே அதை நன்றாக படித்து தேர்ச்சி பெறலாம். முன்ெபல்லாம் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் பிஎஸ்என்எல், அஞ்சல்துறையில் இருந்து கடிதம் வரும்.
அப்போது வேலைக்கு சேர்ந்தவர்கள் பலர் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் இது போன்ற வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்றால் சிரிப்பார்கள். இந்த வேலைக்கு என்னால் போகமுடியாது என்பார்கள், ஆனால் தற்போது உணவு சப்ளை செய்யும் பணியை ஆர்வமுடன் செய்கின்றனர். ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. ஆடிட்டர் முடித்தவர்களின் பையன்கள் அனைவரும் வேலை பார்த்து சிஏ தேர்வு எழுதி ஆடிட்டராக பணிபுரிகின்றனர். இதற்கெல்லாம் முதற்காரணம் மனப்பான்மை தான், இளைஞர்கள் அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும். அவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே மத்திய அரசு பணிகளில் தேர்வு எழுத ஆர்வமுடன் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்எஸ்சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வாணையத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பங்கள் குறைவாக த்தான் வருகிறது. நிறைய பணியிடங்கள் இருக்கும் போது அவர்கள் ஏன் விண்ணப்பிக்க மறுக்கின்றனர் என்று என்னிடம் கேட்கிறார்கள். இங்குள்ள மாணவர்கள் முதலில் நாம் என்னவாக வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், தாங்கள் படிக்கும் போது வேலைக்கு சேர வேண்டும் என்ற எண்ணம் அவர்களது மனதில் உருவாக வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் நிறைய ஆள் பற்றாக்குறை உள்ளது. இதை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U