👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஏஜென்ட் ஸ்மித் என்ற பெயரில் வாட்ஸஅப்பில் வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் 1.5 ஸ்மார்ட்போன்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு விதமான ஆப்களை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை இல்லை. ஹேக்கர்கள், கவர்ச்சிகரமான ஆப்களை வெளியிடுகின்றனர். அவற்றை பதிவிறக்கம் செய்யும் போது, நமக்கே தெரியாமல் நம்முடைய ஸ்மார்ட்போன் தகவல்கள், வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவை ஹேக்கர்களிடம் சென்று விடுகிறது.
அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஏஜென்ட் ஸ்மித்’ (Agent Smith) என்ற வைரஸ் வலம் வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த வாட்ஸ்அப் வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 1.5 கோடி ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிடைத்த தகவலின்படி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யும் போது, விளம்பரங்கள் வந்தால், அந்த ஸ்மார்ட்போனில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது
வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில் விளம்பரங்கள் இல்லாத மெசேஜிங் ஆப் ஆகும். அடுத்த ஆண்டு தான் விளம்பரங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஆனால், தற்போது ஏஜென்ட் ஸ்மித் என்ற வைரஸ், ஸ்மார்ட்போனில் ஊடுருவி வாட்ஸ்அப்பில் கண்டபடி விளம்பரங்களை வரச் செய்கிறது. ஆனால், இதுவரையில் எந்த ஒரு வங்கிக்கணக்குகள், செல்போன் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வரவில்லை.
இருப்பினும், விளம்பரங்கள் போடும் வரைக்கும் வந்த வைரஸ், விரைவில் வங்கிக்கணக்கில் கை வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்படி வந்தது?
கூகுளைப் பொறுத்தவரையில் வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கள் அனைத்தும் உடனுக்குடன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விடும். சில பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காத ஆப்களை, ஆர்வக் கோளாறு காரணமாக 9apps.com உள்ளிட்ட மற்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.
இவ்வாறு மூன்றாம் வெப்சைட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்களைப் பதிவிறக்கம் செய்யும் போது, ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் ஆப்பும் ஸ்மார்ட்போனில் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆசிய நாடுகளை குறி வைத்து தான் இந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் தவிர மற்ற வெப்சைட்டுக்களில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் ஏதாவது வருகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை ஏதாவது மாற்றம் தெரிந்தால் உங்களது ஸ்மார்ட்போனில் ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் வந்து விட்டது.
இதிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க, Norton, K7 போன்ற AntiVirus சாப்ட்வேர் மூலம் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U