கல்வி, வேலைவாய்ப்பில் வெளிமாநிலத்தவர் ஊடுருவல் பறிபோகும் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 15, 2019

கல்வி, வேலைவாய்ப்பில் வெளிமாநிலத்தவர் ஊடுருவல் பறிபோகும் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சில மாதங்கள் முன் ரயில்வே பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிந்தது. அதன் பின் எத்தனையோ துறைகளில் ஓசைப்படாமல் வடமாநிலத்தவர் ஊடுருவல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தபால் துறை பணிகளிலும் தமிழகத்தில் பணியாற்றப்போகின்றனர் வெளிமாநிலத்தவர். அவர்கள் தான் உங்கள் வீட்டு கதவை தட்டி தபால் தரப்போகின்றனர். மத்திய அரசு, அது சார்ந்த நிறுவனங்களில் தான் இந்த கொடுமை என்றால், தமிழக அரசு சார்ந்த மின்வாரியத்திலும் இதே நிலை தான். பொறியாளர்கள் பணிகளுக்கும் வெளிமாநிலத்தவர் நுழைந்து வருகின்றனர். ஏன் இந்த தவறுகள்? எங்கே நடக்கிறது? பாதிக்கப்படப்போவது தமிழக இளைஞர்கள் தானே. வெளிமாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கின்றனர். அப்படி தான் வெளிமாநிலத்தவரும் தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஆனால், சமீபகாலமாக திட்டமிட்ட திணிப்புகளில் இது ஒரு ரகம். இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர் என்றவுடன், வேறு வழிகளில் திணிப்புகள் ஆக்டோபஸ் போல பரவி வருகின்றன.
ஏற்கனவே ஓட்டல் முதல் முடி திருத்தும் நிலையங்கள் வரை, செக்யூரிட்டி முதல் கட்டிட மேஸ்திரி வரை வட மாநிலத்தவர் ஆதிக்கம் தான். ஒரு ஓட்டலில் நுழைந்தால் நூற்றில் 10 பேர் வேண்டுமானால் தமிழத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். அதுபோல தான், செக்யூரிட்டிகளில் 99 சதவீதம் பேர் அவர்கள் தான். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள், ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பணியிலும் அவர்களுக்கு உரிய வாய்ப்பை தவற விடுகின்றனர் என்பதை விட, பறிபோகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே உண்மை. யாரின் தவறு இது? அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசுக்கு பணிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக அரசின் பரிதாப நிலையே இதற்கு காரணம் என்று சமூக சிந்தனையாளர்கள் வேதனைப்படுகின்றனர். இதோ நான்கு கோணங்களில் ஓர் அலசல்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews