மத்திய அரசு மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐடியை கேட்பது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 12, 2019

மத்திய அரசு மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐடியை கேட்பது ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து வாரத்துக்கு ஒரு பதிவாவது வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளையும் அவற்றில் பயிலும் மாணவர்களின் சமூக வலைதளக் கணக்குகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டிருக்கிறது. இது குறித்த சுற்றறிக்கையை ஏறத்தாழ 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான சமூக வலைத்தள பக்கங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்கள், கல்லூரி மற்றும் மாணவர்களின் கணக்குகளை இந்த சமூக வலைத்தள கணக்குகள் மூலம் பின்தொடர்வதால் துறை சார்ந்த பணிகள் பற்றி அரசு தெரிவிக்க விரும்புவதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து வாரத்துக்கு ஒரு பதிவாவது வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைத்தள கணக்கு இல்லாவிட்டால் புதிதாதகத் தொடங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் ஜீலை 31ஆம் தேதிக்குள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சமூக வலைத்தள பக்கங்களுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் குரல் எழுந்துள்ளது. மாணவர்களை கண்காணித்து அவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் கைவைக்கும் முயற்சி இது என விமர்சிக்கப்படுகிறது. இதற்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை பதில் தந்துள்ளது. மாணவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதற்கே விரும்புவதாகவும் அவர்களைக் கண்காணிக்கும் உள்நோக்கம் இல்லை எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews