சென்டாக் தரவரிசை பட்டியல்: 11,163 பேருக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 12, 2019

சென்டாக் தரவரிசை பட்டியல்: 11,163 பேருக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்-ஆப் மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்த பொதுப்பிரிவைச் சேர்ந்த 42 பேரும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த 56 பேரும் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தேவையான ஆவணங்களை இணைக்காத மற்றும் விவரங்களைக் குறிப்பிடாத 65 பேர் தரவரிசையில் இல்லை. புதுச்சேரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை சென்டாக் அமைப்பு வெளியிட்டுள்ளது புதுச்சேரி உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் சென்டாக் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் நடத்துகிறது. இதன்படி சென்டாக் அமைப்பு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தெலுங்கு மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டு மற்றும் பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பித்த 11,544 பேரில் 11,163 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பொதுப்பிரிவினருக்கான நீட் கட்-ஆப் 134 மதிப்பெண்கள். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான நீட் கட்-ஆப் 107 மதிப்பெண்கள். இதன்படி, கட்-ஆப் மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்த பொதுப்பிரிவைச் சேர்ந்த 42 பேரும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த 56 பேரும் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் தவிர விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை இணைக்காத மற்றும் விவரங்களைக் குறிப்பிடாத 65 பேர் தரவரிசையில் இல்லை.
1,671 பேர் அவர்கள் விண்ணப்பத்தில் விடுபட்டிருக்கும் தகவல்களை சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டியலில் ஏதேனும் திருத்தம் கோர இன்று மாலை 5 மணி வரை அவரை அவகாசம் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெற விரும்புவோர் அதற்காக ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே சென்டாக் முறையில் குளறுபடிகள் ஏற்பட்டன. மீண்டும் பழைய முறைக்கே மாற வேண்டும் எனவும் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews