👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்த, தமிழகத்தை சாராத, 22 மாணவர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு, ஜூனில் முடிந்தது. மொத்தம், 59 ஆயிரத்து, 756 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 31 ஆயிரத்து, 353 பேர் தகுதி பெற்றனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 25 ஆயிரத்து, 651 பேர் தகுதி பெற்றனர். மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங், 8ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இதற்கிடையே, அவர்களில், 77 பேரின் பெயர்கள், ஆந்திர மாநிலத்திலும், 130 பேரின் பெயர்கள், கர்நாடக மாநிலத்திலும், 12 பேரின் பெயர்கள், தெலுங்கானா மாநிலத்திலும், மருத்துவ தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, போலியாக இருப்பிட சான்றிதழ் பெற்று, இரு மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 22 மாணவர்களின் பூர்விக சான்றிதழில், குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களது பெயர்கள், தரவரிசை பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளன.102 இடங்கள் நிரம்பினதனியார் மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், 852; பி.டி.எஸ்., படிப்பில், 690 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கியது. இதில், 3,205 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், 266 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில், 102 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U