Breaking

Tuesday, July 16, 2019

'பண்ணை சுற்றுலா' திட்டம் பாழாகிறது! ஓராண்டாகியும் மாணவர்கள் வருகை இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தோட்டக்கலை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், ஓராண்டாக செயல்பட்டு வரும் 'பண்ணை சுற்றுலா' திட்டம் மாணவர்கள் வருகையின்றி பாழாகிறது. விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வி.ஆர்.ஐ.,-3 வீரிய ரக முந்திரி, மா, பலா, கொய்யா, பப்பாளி, கத்தரி, மிளகாய், கேந்தி மற்றும் கீழாநெல்லி, முடக்கத்தான், துாதுவளை, வல்லாரை, பிரண்டை, துளசி, கற்றாழை, கற்பூரவள்ளி, நிலவேம்பு ஆகிய 9 வகையான மூலிகை செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, சிந்துாரா, காலப்பாடு, நீலம் என 6 வகையான மா கன்றுகள்; லக்னோ 49, சிட்டிடார் வகை கொய்யா, பாலுார் 1 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி கன்றுகள் மென்தட்டு ஒட்டு, பக்க ஒட்டு, பதியம், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் மூலம் கன்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையிலும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் 23 அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் 2 பூங்காக்களில், கடந்தாண்டு பண்ணை சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், சென்னை, தஞ்சை, நீலகிரி, சேலம், சிவகங்கை மற்றும் கடலுாரில் விருத்தாசலம் உட்பட 15 பண்ணைகள் இடம் பெற்றன. இதன் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு நேரில் வந்து, பண்ணைகளின் செயல்பாடு, பயிர் சாகுபடி முறை, நாற்றுகள் உற்பத்தி மற்றும் இயற்கை சார்ந்த தோட்ட அமைப்பு ஆகியவற்றை கண்டு ரசிப்பதுடன், அவற்றை தெரிந்து கொள்ள முடியும்.இதற்கு, பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு 25 ரூபாய் நுழைவுக் கட்டணம் பெறப்படுகிறது.
அப்போது, பண்ணையின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் செடிகள் உற்பத்தி குறித்து செயல் விளக்கம் தரும் அலுவலர்கள், 10 ரூபாய் மதிப்புள்ள தோட்டக்கலை நடவு செடியை இலவசமாக வழங்குவர்.ஆனால், இந்த திட்டம் குறித்து கல்வித்துறைக்கு போதிய தகவல் தெரிவிக்காததால், மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திட்டம் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் மாணவர்கள் வருகை இல்லாதது, தோட்டக்கலைத்துறையின் முயற்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அழைத்து வரலாம். அதுபோல், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினால், அவர்கள் பள்ளி வாகனங்கள் மூலம் சுற்றுலா திட்டத்திற்கு அழைத்து வருவர். இது குறித்து தோட்டக்கலைத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பண்ணை சுற்றுலா திட்டத்தை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog