👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மதுராந்தகம் நகராட்சி பகுதியில், மேல்நிலைப்பள்ளி துவக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி, கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் : அ.தி.மு.க., - செல்வமோகன்தாஸ் பாண்டியன்: தென்காசி தொகுதி, கீழப்பாவூர் ஒன்றியம், வெள்ளகாலில் உள்ள, நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அரசு முன்வருமா? அமைச்சர் செங்கோட்டையன் : அப்பள்ளி, அதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை. செல்வ மோகன்தாஸ் பாண்டியன்: வெள்ளகாலில் உள்ள நடுநிலை பள்ளி மாணவர்கள், எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால், ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதனால், பெற்றோர், மேல்நிலை கல்வி கற்க, தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. எனவே, விதிகளை தளர்த்தி, அங்குள்ள நடுநிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - புகழேந்தி: மதுராந்தகம் அடுத்த, எல்.என்.புரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும். மதுராந்தகம் நகராட்சி பகுதியில், அரசு நடுநிலை பள்ளி உள்ளது. உயர்நிலை பள்ளியோ, மேல்நிலை பள்ளியோ இல்லை. எனவே, அங்கு, ஒரு அரசு மேல்நிலை பள்ளியை, அமைத்து தரவேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு பரிசீலிக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U