👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீதப் பங்குத் தொகையுடன் மத்திய அரசின் ஸ்மார்ட் மடிக்கணினிகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அருகே காசிபாளையத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 1.50 கோடி மரக்கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகிதப் பங்குத் தொகையுடன் மத்திய அரசின் ஸ்மார்ட் மடிக்கணினிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் புதிதாக 750 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேள்வித் தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குரிய மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வெழுத, அருகிலேயே பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் சாவக்கட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இதேபோல் மூணாம்பள்ளியில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திட்டமலை அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியையும் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும் எனவும் 6 முதல் 8ம் வகுப்பு வரை சீருடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "காசிப்பாளையம் பேரூராட்சியில் 300 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீத நிதியுதவியுடன் ஸ்மார்ட்மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இன்னும் ஓராடிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியா மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்