Breaking

Friday, June 01, 2018

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்


ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11 சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான, விண்ணப்ப பதிவு, மே, 28ல் துவங்கியது.

இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. இன்று முதல், 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம்.இந்த ஆண்டு முதல், ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்ப பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம் என, அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog